சேலத்தில் 800 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்! லைசென்ஸ் ரத்து!

0
140
800-school-vehicles-fined-in-salem-license-cancellation
800-school-vehicles-fined-in-salem-license-cancellation

சேலத்தில் 800 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்! லைசென்ஸ் ரத்து!

சேலம் மாவட்டத்தில்  கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர்ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா என்பதை வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள்  சோதனை நடத்தி வருகின்றார்கள். கடந்த  மூன்று  மாதங்களில்  மொத்தம் 800 பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில்  பள்ளி குழந்தைகளை அதிக அளவு  எண்ணிக்கையில் ஏற்றி செல்வது , பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி இயக்கிய 95 தனியார் பள்ளி வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அபராதமாக ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய  இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து செல்போன் பேசி கொண்டு  வாகனம் இயக்கியது, அதிவேகத்தில் வாகனம் ஓட்டியது, மற்றும் போதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட சாலைவிதிகளை மீறிய பொதுமக்களில் 23 பேரின் லைசென்ஸ் 6 மாதம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleபெண்களை ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் என்று அமைச்சரே பேசுவதா? டிடிவி தினகரன் கண்டனம்
Next articleதமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு