8000- த்தை தாண்டிய கருப்பு பூஞ்சைத் தொற்று! இந்த மூன்று மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கை!

Photo of author

By Kowsalya

மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.

 

மே 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் குறைந்தது 8,848 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் மக்கள் பாதிக்கபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

 

குஜராத்தில் 2281 அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் 2000 கருப்பு பூஞ்சை கேஸ்கள் உள்ளன. ஆந்திராவில் 910 முக்கோர்மிகோசிஸ் நோயாளிகள் உள்ளனர். இந்த மூன்று மாநிலங்களும் நாட்டின் மொத்தம் 58.66% ஆகும்.

 

ஆய்வுக்குப் பிறகு. பல்வேறு மாநிலங்களில் கருப்பு பூஞ்சை தொற்று நோயாளிகளுக்கு ஏற்ற வாரு ஆம்போடெரிசின்- பி மருந்து மொத்தம் 23680 கூடுதலாக இன்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

8848 நோயாளிகள் தோராயமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா சனிக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

 

நோய்த்தொற்று ஏற்பட்டால், மக்கள் சில நாட்களில் இறக்கலாம். இருப்பினும் இது தொற்று இல்லை என்று சி.டி.சி. கூறியுள்ளது.

பொதுவாக உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பூஞ்சையை விரட்டுகிறது மற்றும் கடுமையாக பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர் – உதாரணமாக உறுப்பு மாற்று அல்லது புற்றுநோய் நோயாளிகள் – பாதிக்கப்படுகிறார்கள்.