தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 பணியிடங்கள்- தமிழக அரசு அதிரடி உத்தரவு

Photo of author

By Parthipan K

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 807 பணியிடங்கள்- தமிழக அரசு அதிரடி உத்தரவு

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 203 காலி பணியிடங்கள் உள்ளது. அதில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 800 காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கொண்டு நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணிக்கு கல்வி தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.சி. ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், 18 மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களை நிரப்பு சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.