தனக்கு எதிராக செயல்பட்ட சினிமா அரசியலைப் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்ட 80-களின் டாப் ஹீரோ!

1978 ஆம் ஆண்டு  ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சுதாகர், 80-களில் டாப் ஹீரோக்களில் இவரும் ஒருவர்.

வெளியான இந்தப் படத்தில்தான் அறிமுகமானார் ராதிகாவும். இந்தப் படமும் பாடல்களும் கன்னாபின்னான்னு ஹிட்டானது.  அதன்பின் இவர், இனிக்கும் இளமை, மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்குப் புதுசு, நிறம்மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் என தொடர்ந்தது சுதாகரின் ஹிட் பயணம். 

தமிழில் நடித்துக் கொண்டே தெலுங்கிலும் ஹீரோவாக நடித்து வந்த சுதாகர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போனார்.

தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் குறைய, ஒரு கட்டத்தில் காமெடி நடிகராக அவர் மாறியது சோகத்திலும் சோகம்தான். இதற்கெல்லாம் காரணம் சினிமாவில் நிலவிய அரசியலை இன்று மனவருத்தத்துடன் சுதர்சன் தெரிவித்துள்ளார். 

அதன் பின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.

 

Leave a Comment