10 ஆண்டுகளில் 9 லட்சம் வீடுகள்! முதல்வரின் அடுத்த இலக்கு!
திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது தான் ஆட்சியை கைபிடித்துள்ளது.ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து தற்போது வரை பல நலத்திட்டங்களை மகளுக்காக செய்து வருகிறது.அந்தவகையில் முதல் ஆட்சியில் அமர்ந்த உடனே சிறப்புமிக்க 5 தட்டங்களில் கையெழுத்திட்டது.அதனையடுத்து தற்போது வரை பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.முதலில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 வரை குறைப்பு,மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்,மக்களின் குறைகளை கட்டறிய அனைத்து தொகுதிகளும் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் போன்ற திட்டங்கள் மக்களுக்கு பெரும் உதவியாக காணப்படுகிறது.
விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் வேளானுக்கென்று பட்ஜெட் தாக்கல் செயப்பட்டது.அதில் பல கடனுதவிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.அதேபோல மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்ககப்பட்ட கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதுபோல ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து 200 க்கும் மேற்பட்ட திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் இன்று சென்னை கிரடாய் அமைப்பின் மாநில மாநாட்டை ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்தார்.தமிழ்நாட்டை 12 மண்டலங்களாக பிரித்த பிறகு திட்டங்கள் வெளியிடப்படும் என கூறினார்.அதேபோல ஓசூர் மற்றும் மதுரை நகரங்களில் நகர வளர்ச்சி ஏற்படுத்துவதர்கென்று குழுமங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.தற்போது வீடு மனைகள் வாங்குவது விற்பது 17 சதவீதம் அதிகரித்துள்ளது ஏடு கூறினார்.
அதுமட்டுமின்றி தமிழக அரசுக்கும் இதுவரை ரூ.5978 கோடி வருமானம் ஈட்டி தந்ததாக கூறியுள்ளார்.வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் கட்டுமானத்துறையில் பல புதிய திட்டனக்ளை தற்போதைய அரசு மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.அதுமட்டுமின்றி 2031 க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று கூறினார்.மேலும் இதற்காக பத்தாண்டுகளில் 9 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று கூறினார்.அவ்வாறு வீடுகள் கட்டப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் என கூறினார்.அதேபோல நடுத்தர மக்களுக்கு நியாய வாடகைக்கு வீடுகள் கட்டப்படும் என்றும் கூறினார்.