இனி யாரும் கைநாட்டு கிடையாது! வந்துவிட்டது அமைச்சரின் சூப்பர் திட்டம்!

0
98
No one is handcuffed anymore! The minister's super plan has arrived!
No one is handcuffed anymore! The minister's super plan has arrived!

இனி யாரும் கைநாட்டு கிடையாது! வந்துவிட்டது அமைச்சரின் சூப்பர் திட்டம்!

கொரோனா தொற்று பரவல்  தற்பொழுது தான் குறைந்து மக்கள் அனைவரும் தினசரி வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.அதேபோல பள்ளி மற்றும் கல்லூரிகளும் தற்பொழுது தான் திறக்கப்பட்டு மாணவர்கள் பாடங்களை பயின்று வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்றானது டெல்டா வகை கொரோனாவாக மாறி  இப்பொழுது ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது.இது கொரோனா முதல்  மற்றும் இரண்டாம் அலையை காட்டிலும் அதிகளவு தாக்கத்தை கொண்டதாக இருப்பதாக கூறியுள்ளனர்.இத்தொற்றானது வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களிடம் காணப்படுகிறது.ஏனென்றால் இந்த ஒமைக்ரான் தொற்றானது தென் ஆப்ரிக்காவில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல அதன் அண்டை நாடுகளிலும் அதன் தொற்று அதிகளவு பரவி வருகிறது.அதனால் அந்நாட்டிலிருந்து இந்தியா வரும் நபர்களுக்கு  ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்படுகிறது.இந்நிலையில்  அவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 15  க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மகாராஷ்டிராவில் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அதேபோல தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.

அதனையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் எடுக்கப்பட்டது.தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்களை நேரடி வகுப்பு முறையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இதில் ஆன்ரைடு மொபைல் இல்லாத   மாணவர்களால் ஆன்லைன் மூலம் பாடங்களை பயில முடியாமல்  போனது.அதனால் அந்த மாணவர்களுக்காக இல்லம் தேடிப் பாட கல்வித்திட்டம் என்பதை அமல்படுத்தினர்.தற்பொழுது இது தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரக்கோணத்தை அடுத்துள்ள அம்மனூர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பெத்ரூ ஆலையத்தில்  ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அவ்வாறு வழங்கி விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.தற்பொழுது வரை இல்லம் தேடி கல்வி திட்டம் 12 மாவட்டங்களில் சிறப்பாக நடந்து வருகிறது.அதேபோல இதர  மாவட்டங்களிலும் வரும் ஜனவரி மாதம் முதல் இல்லம் தேடி கல்வி திட்டம் அமலுக்கு வரும் என கூறினார்.அதுமட்டுமின்றி கை நாட்டு முறையை ஒழிப்பதற்காக அனைவரும் கையெழுத்து போடா கற்றுக்கொள்ள ஏற்றவாறு  கிராமப்புறங்களில் பள்ளிசாரா கல்வி இயக்கம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.