தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைக்க இருக்கிறார். இந்த முதல்வர் மருந்தகத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கும் அனைத்து வகையான மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக பிஃபார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மானியத்துடன் கூடிய கடனுதவியால் இந்த முதல்வர் மருந்தகங்களை அமைப்பதற்கு அவர்களுக்கு தமிழக அரசு உதவி புரிந்ததோடு இன்று தமிழகத்தில் மொத்தம் ஆயிரம் இடங்களில் இந்த முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்.
முதல்வர் மருந்தகத்தில் ஏழை எளிய மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் ஜெனரிக் மருந்துகள் உட்பட அனைத்து உயர்தர மருந்துகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த முதல்வர் மருந்தகத்தில் 30 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் மட்டும் இன்றி பி பார்ம் மற்றும் டி ஃபார்ம் படித்த மாணவர்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படுவதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வழங்கப்படாத என யாரும் நினைக்க வேண்டாம் என்றும் வழக்கம்போல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.