மத்திய அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் தற்பொழுது 10 லட்சம் வரை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த முழு விவரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
உணவு பதப்படுத்தக் கூடிய குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு 60 சதவிகிதம் மற்றும் மாநில அரசு 40 சதவீதம் என தங்களுடைய பங்களிப்புகளை வழங்கி வருகின்றன. அவ்வாறு தற்பொழுது இதுபோன்ற உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்காக மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் வரை மானியத்தை அறிவித்திருக்கிறது.
இதில், முன்கூட்டியே தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களை விரிவாக்கம் செய்தல், புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தகமுத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்பப் பயிற்சிகள் போன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு அவற்றிற்கு ஏற்ப மதிப்பீட்டின்படி 10 சதவிகிதம் மற்றும் முதலீடு செய்தால் போதும் என்றும் 90 சதவிகிதம் வங்கி கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் அதில் 10 லட்சம் ரூபாய் வரை மானியமாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவை மட்டுமல்லாது விற்பனை மற்றும் வர்த்தக முத்திரைக்காக 50 சதவீதம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கும் முறை :-
இத்திட்டத்தில் பயன்பெற நினைப்பவர்கள் https://www.mofpi.gov.in/pmfme/enews2.html என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.