ஆர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த ‘90ML’நடிகை!

Photo of author

By CineDesk

ஆர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த ‘90ML’நடிகை!

CineDesk

Updated on:

ஆர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த ‘90ML’நடிகை!

ஆர்யா நடித்த ’மகாமுனி’ மற்றும் ’காப்பான்’ ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ’டெடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்’ த்ரில்,சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகையும் அவருடைய மனைவியுமான சாயிஷா நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தை ’டிக் டிக் டிக்’ உட்பட ஒரு சில படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால் சமீபத்தில் இணைந்தார் என்பதும் இந்த படத்தின் காமெடி கேரக்டரில் சதீஷ் நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். டி இமான் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஓவியா நடித்த ‘90ml’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த மசூம் சங்கர் ’டெடி’ படத்தில் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் ஆர்யாவுக்கு மிகவும் நெருக்கமான கேரக்டரில் நடித்து வருவதாகவும் இவருடைய கேரக்டர் தான் இந்த படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடித்த ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் அந்தப் படம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.