Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம் 

Photo of author

By Anand

Sivakarthikeyan – சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் இணைந்த 90’ஸ் பிரபலம்

கடந்த ஆண்டு யோகி பாபு மற்றும் சங்கிலி முருகன் நடிப்பில் வெளியான மண்டேலா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின்.அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கவுள்ள இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22 வது திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் சங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஏற்கனவே இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள விருமன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் மிஷ்கின் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே சில 90’ஸ் பிரபலமான நடிகை சரிதாவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

saritha
saritha

அதுமட்டுமல்லாமல் கவுண்டமணியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.