டெல்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ல் தொடங்கியது. முதல் நாள் அதானி மீது உள்ள அமெரிக்கா வழக்கு விவகாரத்தை எதிர்ப்பை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் தினமும் இந்த விவகாரத்தை வைத்து அமளில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் முடங்கியது. திடீர் திருப்பமாக எதிர்க்கட்சிகளுக்கும் அரசுக்கும் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. அரசியலமைப்பின் 75 வது ஆண்டு விழாவை ஒட்டி சிறப்பு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்க்கு அரசும் ஏற்றுக்கொண்டது.
லோக்சபாவில் விவாதம் பிரதமர் பதிலுடன் அமைதியாக முடிந்தது. ராஜ்யசபாவில் இறுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதிலுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. அம்பேத்கர் பற்றி அவர் பேசிய கருத்துக்களை எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கினார். மேலும் அதானி விவகாரத்தை பின்னுங்கு தள்ளிவிட்டு தற்போது அம்பேத்கர் விகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் எம்பிக்களுக்குள் ஏற்பட்ட கை கலப்பில் இரண்டு எம்பி மண்டை உடைந்தது.
அதனை அடுத்து கடைசி நாளா நேற்று லோக்சபாவிற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். இதற்கு மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்புவதாக தெரிவித்தனர். பார்லிமென்ட் ஒரு நிமிடத்திற்கு 2.5 லட்சம் செலவு செய்யப்படுகிறது. நடந்து முடிந்த குளிர்கால கூட்ட தொடரில் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக 65 மணி நேரம் 15 நிமிடங்கள் சபை நடவடிக்கை முடங்கியது. இந்த ஆண்டு நடந்த மூன்று கூட்டத்துடன் இதுவே அதிகம். சராசரியாக 97. 80 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது.