ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்! 

0
200
Incident to continue in Madurai! People in the area in shock!
Incident to continue in Madurai! People in the area in shock!

 

ஒரு குழந்தை இத்தனை லட்சமா? மதுரையில் தொடர்ந்து அரங்கேறும் அதிர்ச்சி சம்பவம்!

கடந்த மாதம் மதுரை மேலூர் அருகே கோட்டை நத்தம் பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஒரு ஆண் குழந்தையை குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் மூதாட்டியை விசாரித்தபோது திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு  விற்றதாக கூறினார். அதனையடுத்து மதுரையில் சிலாங் என்ற பகுதியில்  குழந்தையை விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பாகுடி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நான்காவது முறையாக பெண் குழந்தை பிறந்தது அந்தப் பெண்  வறுமை குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் நான்கு பெண் குழந்தைகளையும் வளர்க்க முடியாது என்ற காரணத்தால். ஒரு முஸ்லிம் தம்பதிகளுக்கு குழந்தையை விற்று பணம் பெற்றதும் அரங்கேறியுள்ளது.

மேலும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள டீஆண்டிபட்டி சின்னம்மாநாயக்கன்பட்டி சேர்ந்தவர் சின்ன கருப்பன் அவரது மனைவி அங்கம்மாள் (45) இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் அங்கம்மாள் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே இறந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தன் உறவினர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பிணியான இவர் வாடிப்பட்டி அருகே உள்ள சித்திரங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் சேய் நன்றாக இருப்பதாகவும் கூறி வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். ஒரு வாரத்திற்குப் பிறகு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த  வேண்டும். நாளை குழந்தையை எடுத்து வரவேண்டும் எனவும் கூறியிருந்தார். அப்போது அங்கம்மாள் தனது குழந்தையின் உறவினர் வீட்டில் இருப்பதாகவும் நாளை மறுநாள் அழைத்து வருகிறேன் என்றும் கூறினார். இரண்டு நாட்கள் ஆகியும் குழந்தை தடுப்பூசி போடுவதற்கு எடுத்து வரவில்லை என கேட்டபோது குழந்தை காணாமல் போய்விட்டது என அங்கம்மாள் செவிலியரிடம் கூறினால். அதைக் கேட்ட செவிலிய மிகவும் அதிர்ச்சியடைந்து மருத்துவரிடம் இந்த செய்தியை தெரிவித்தார்.

மருத்துவர் ஆர்த்தி   குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்து வாடிப்பட்டி போலீசார் மாயமான குழந்தையை குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அங்கம்மாள் குழந்தையை சில லட்ச ரூபாய்களுக்கு ஒரு தம்பதிக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்த அங்கம்மாள் தலைமறைவாகிவிட்டார். அங்கம்மாளை பிடித்த உடன் முழு விவரங்களும் தெரியவரும் எனவும் போலீசார் கூறினார். மதுரையில் குழந்தை விற்பனை மெல்ல மெல்ல தலை தூக்கி வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்!
Next articleஎடப்பாடி உருவபொம்மை எரிப்பு! திரண்டுவந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ‘செருப்பால் அடித்து’ தேனியில் பரபரப்பு!