இனி பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் பால்! அரசின் புதிய உத்தரவு!
தொற்று பாதிப்புக்கள் கணிசமாக நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டுதான் அனைத்து மாநிலத்திலும் முறையாக பொது தேர்வு நடைபெற்றது. தேர்வின் முடிவுகள் வெளிவந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். நமது தமிழகத்தில் தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் காலை நேரத்தில் பால் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதனடிப்படையில் முக்கிய மந்திரி பான் கோபால் யோஜனா திட்டத்தின் கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு முறை காலை நேரத்தில் பால் வழங்கப்படும் என்று திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளனர். திட்டத்தினால் மாணவர்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயிலும் 60 லட்சம் மாணவர்களுக்கும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பால் பவுடரில் உற்பத்தி செய்யப்படும் பால் வழங்கப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் பவன்குமார் கோயல் கூறியுள்ளார்.
அதிலும் குறிப்பாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 150 மில்லி அளவு பாலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 200 மில்லி பாலும் தரப்படும் என்று தெரிவித்துள்ளனர். மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளிக்கு வருகை வருவதையொட்டி உணவு உண்ணாமல் வருவர். அவர்களால் சிறப்பான முறையில் பாடங்களை கற்க இயலாது. இத்திட்டத்தால் ஊட்டச்சத்து அதிகரித்து பாடங்கள் கற்க ஏதுவாக இருக்கும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.