கணவனே எமனாக மாறிய நிலை! சேலத்தில் நடந்த விபரீதம்!

Photo of author

By Parthipan K

கணவனே எமனாக மாறிய நிலை! சேலத்தில் நடந்த விபரீதம்!

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் குடும்பத்தகராறு காரணமாக  மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உங்க கருங்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் இவருக்கு வயது 30 ,ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பவித்ரா இவருக்கு வயது 20. ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரின் விட்டார் சம்மதத்தோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பூபாலன் மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் வீட்டில் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள். இந்தச் சண்டை ஒருநாள் பெரிய பூகம்பம் ஆனது. சண்டையின் காரணமாக பவித்ராக கோபித்துகொண்டு  தந்தை வீட்டுக்கு சென்றார். அப்போது கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பூபாலனின் தாத்தா உடல் நலக் குறைவால்  உயிரிழந்தார்.

அச்செய்தியை கேட்ட பவித்ரா பூபாலன் தாத்தா உடலுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக கொளத்தூர் வந்தார். அப்போது பூபாலன் தன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். கணவன் மனைவி இருவருக்கும் பெரிய சண்டையாக ஏற்பட்டது என கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து சென்ற பவித்ரா வீட்டில் இருந்த மரச்சட்டத்தில் வேஷ்டி துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்வதற்கு  மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.