அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!  

அரசு பள்ளி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்!நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

2022-2023 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டுதொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில் பள்ளி படிப்பை முடித்து மாணவர்கள் தங்களது உயர்கல்வி தொடங்குவதற்கு மிகவும் கடினமாக இருகின்றது.அதனால்  இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி திட்டதின் கீழ் பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வி படிப்பை தொடங்குவதற்கு உதவும் வகையில் இந்த அறிவிப்பானது அமையும் எனவும் கூறினார்.

இதன் முலம் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு , பட்டயப்படிப்பு , தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் பட்டப்படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்  எனவும் அறிவித்தார்.மேலும் இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம் எனவும்.  இத்திட்டத்தின் மூலம், சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் ரூ.698 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தார்.

Leave a Comment