தேசிய கைப்பந்து போட்டியில் தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி சாதனை! பரிசளித்து பாராட்டை கூறிய மாவட்ட ஆட்சியர்!

Photo of author

By Rupa

தேசிய கைப்பந்து போட்டியில் தேனி அரசு விளையாட்டு விடுதி மாணவி சாதனை! பரிசளித்து பாராட்டை கூறிய மாவட்ட ஆட்சியர்!

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 17). இவர் தேனி அரசு விளையாட்டு விடுதியில் தங்கி கைப்பந்து பயிற்சி பெற்று வருகிறார். அவர் பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இந்த மாணவி அரியானாவில் கடந்த 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், இந்த மாணவி பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார். மாணவி ஆனந்தியை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உடனிருந்தார்.