விஜய் சேதுபதிக்கு தம்பி உள்ளாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
மக்கள் செல்வன் என விஜய் சேதுபதி திகழ்வதற்கு காரணம் இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் ஒரு தனித்துவம் இருக்கும் எனவும் கூறுவார்கள். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் ஆகவும் நடிப்பார் மற்றும் பல கவுரவ வேடத்திலும் நடித்து தனக்கு என்ற ஒரு பெயரை பதித்துள்ளார்.
அவ்வப்போது தனது வலைதள பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டு வருவார். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக திரையுலகில் வலம் வரும்.
இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. அந்த படமானது விக்ரம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல். இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்சேதுபதி போலவே சின்னதிரையில் ஒருவர் அச்சு அசலாக இருக்கிறார்.
இவர் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வருகிறார். அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் தற்போது சின்னத்திரைகளும் ஒரு விஜய் சேதுபதி எனவும் கமெண்ட் கூறி வருகிறார்கள்.