டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் போராட்டம் தொடருமா? பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு!
ஆசிரியர்கள் சென்னையில் டிஜிபி வளாகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் நிரந்தர பணியில் நியமனம் செய்யப்படாத காரணத்தினால், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் அறிவித்தனார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், “என்னைப்போன்ற ஆசிரியர்கள் பலர் மாதத்திற்கு பலமுறை ஆங்காங்கே போராடிக்கொண்டே இருக்கிறோம். திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்கு அறிக்கையை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக 2013-இல் தேர்ச்சிபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்கிறோம் என்று கூறினார்கள். எங்களுக்கு பணி நியமனம் வேண்டும். நாங்கள் பல மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள். ஆசிரியர்கள், நாங்கள் தேர்ச்சி பெற்று 13 வருடங்கள் ஆகிறது.
இதுகுறித்து இன்னும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறினார். கல்வி துறை அமைச்சர் இந்த இடத்திற்கு வரும் வரை இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பி தான் நாங்கள் ஓட்டு போட்டோம். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது ஆனால் இது வரை இது குறித்து எந்த தகவலும் எட்டவில்லை. நாங்கள் அனைவரும் தகுதியான ஆசிரியர்கள் தான் தகுதி இல்லாமல் வேலை கேட்கவில்லை என்று கூறினார்கள். எங்களுடைய உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம் பதில் சொல்லுங்கள் என்று ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.