முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்! பரபரப்பில் கட்சித் தலைமையகம்!
இன்று சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கு எடுப்பு நடத்துவதற்கு பகத்சிங் கோசியாரி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனையடுத்து இந்த உத்தரவை தொடர்ந்து எதிர்ப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. எதிர்ப்பு தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் எனவும் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவு தராமல் தன்னை விலக்கிக் கொண்டதாகவும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா உறுப்பினர்கள் தெரிவித்தனர். சிவசேனா தலைமையில் கூட்டணி ஏற்பட்டது அரசுக்கு நெருக்கடி தருவதாகவும் உத்தவ் தக்ரே தொலைக்காட்சி நேரலையில் கூறியிருந்தார்.
அப்போது அவர் தான் ராஜினாமா செய்ததாகவும் தகவல் தெரிவித்துயிருந்தார். அப்போதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில், என்னுடைய கட்சியினரே எனக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஆளுநரை நேரில் சந்தித்து உத்தவ் தாக்கரே தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டர்.பிறகு மாற்று ஏற்பாடு செய்யும் வரை இந்த முதலமைச்சர் பொறுப்பில் தொடர வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டார்.