குடும்பத் தகராறு காரணமாக குடிபோதையில் தூக்கு மாட்டிய கூலித் தொழிலாளி!!
தாராபுரம் அடுத்த தளவாய்பட்டினம் முத்துராஜா புறம் பகுதியை சேர்ந்தவர் தான் சங்கிலி ராஜ். இவருக்கு வயது 55. இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளார்கள். மனைவி கண்ணம்மாள் தம்பதியினருக்கு சரண்யா மற்றும் கன்னியம்மாள் என இரண்டு பகல் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவர்களுடன் பாண்டிச்சேரியில் வசித்து வந்தார்கள்.
இந்நிலையில் சங்கிலி ராஜ் மற்றும் அவரது மனைவி கண்ணம்மாள் இருவருமே சொந்த ஊரான தலைவாய் பட்டினத்தில் வசித்து வந்தார்கள். சங்கிலி ராஜ் குடிக்கு அடிமையானவர். அவ்வப்போது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். சில நேரம் அடித்தும் துன்புறுத்தியும் உள்ளார். சங்கிலி ராஜ் கொடுமை தாங்காமல் கண்ணம்மாள் அவரிடம் சண்டையிட்டு பாண்டிச்சேரிக்கு சென்றுவிட்டார்.
தனிமையில் இருந்த சங்கிலி ராஜ் குடிபோதையில் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் சங்கிலி ராஜ் தாயார் லட்சுமி வயது 75.தன் மகனை இரண்டு நாட்களாக காணவில்லை என அவர் வீட்டிற்கு சென்றார்.அப்போது வீட்டின் கதவுகள் லேசாக அடைக்கப்பட்ட நிலையில் தாப்பால் இடாமல் இருந்துள்ளது.
அப்போது மகனை காணவில்லை என வீடு முழுக்க தேடினார்.அப்போது வீட்டின் மேல் கூரை விட்டத்தில் சேலையில் தூக்கு மாட்டிய நிலையில் மகனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். புதிய நிலையில் மகனை பார்த்ததும் சத்தம் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுனர்.
உடனே காவல் துறையிடம் தகவல் கொடுத்தார்கள். தகவலின் பெயரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தார். பிறகு சங்கிலி ராஜ்வின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்