அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!!

0
158
Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!
Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!!

கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குழப்பம், கூச்சல் , சண்டை,பரபரப்பு என்று நிறைவடைந்த நிலையில் கட்சியில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாகவும் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினார்கள்.

அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமி தான் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்கள். இந்நிலையில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றும் அவர் கட்சியினுடைய பொறுப்பாளர் மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், நகர் புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாநகராட்சி கவுன்சிலர், எட்டு பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதிவுகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவங்களில் சம்பந்தப்பட்ட கட்சியின் சார்ந்தவர்களின் தலைவர்கள் மட்டுமே  கையெழுத்து போட வேண்டும்.அதற்காக ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினார்.

இதனை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி ஏன்?ஓபிஎஸ் கடிதம் நிராகரிக்கப்பட்டது என்று விளக்கம் கடிதம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில்  திடிரென்று எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் அதிமுக பொறுப்பை மாற்றிக் கொண்டுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை எடுத்துவிட்டு தலைமை நிலைய செயலாளர் என மாற்றிக் கொண்டார்.இதனால் கட்சியினரிடையே சில சலசலப்பு இருந்து வருகிறது.

Previous articleகேரளாவில் பெரும் பரபரப்பு! அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!
Next articleசசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!