விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி!

0
211

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் அவரது நடிப்பு பெரும்பாலானவர்களால் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து மஞ்சுவாரியருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த படம் ஒரு தமிழ்படம் இல்லை என்பதும் விஜய் சேதுபதி நடிக்கும் மலையாள படம் ஒன்றில் தான் அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஷான் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி!

ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி, ஜெயராம் நடித்த ’மார்கோனி மாத்தாய்’ என்ற மலையாள படத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅருண் விஜய்யின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்கள்
Next articleஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here