அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில் பரபரப்பு!
கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியை சேர்ந்த தாமரை, குளம் பட்டணம் , நல்லிட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேரி பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். வீட்டிலிருந்து பள்ளிக்கு வெகு தூரம் செல்ல இருப்பதால் பேருந்தில் செல்லும் நிலையுள்ளது.
அப்போது காலை நேரம் மட்டுமே அவ்வழியாக ஒரே பேருந்து மட்டுமே இயங்கும். அந்த ஒரே பேருந்தில் நூற்றுக்கணக்கான மாணவியர்கள் செல்ல முடியாத காரணத்தால். மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்கின்றனர். இந்நிலையை மாற்றுவதற்காக அவ்வழியாக வரும் அரசு பேருந்துகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வழிமறித்து போராட்டதில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்த கிணத்துகடவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவ நடக்கும் இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் இவ்வழியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் உறுதியளித்த பிறகு மாணவர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் சிறிது நேரம் நடைபெற்றாலும் அப்பகுதியானது மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.