சீருடை பணியாளர்கள் பணியாற்ற எப்படி விண்ணப்பிப்பது? இதோ எளிய முறையில்!!

0
82

சீருடை பணியாளர்கள் பணியாற்ற எப்படி விண்ணப்பிப்பது? இதோ எளிய முறையில்!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பு 2022 -க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNUSRB அறிவிப்பு 2022 அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in கிடைக்கிறது. போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காவல்துறையில் 2180 மற்றும் புலனாய்வுத் துறையில் 1091, 161 சிறை வார்டர் மற்றும் 120 தீயணைப்பு வீரர் உட்பட தமிழ்நாடு காவல்துறையில் மொத்தம் 3,552 காலியிடங்களை TNUSRB அறிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை எழுத்துத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இதற்கான கல்வித் தகுதிகள் விண்ணப்பதாரர் 10ஆம் வகுப்பு / SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.மேலும்
வயது வரம்பு ஜூலை 1, 2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.TNUSRB தேர்வை மூன்று கட்டங்களாக நடத்தும். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் NCC, NSS, Sprots/Games சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப்பட்டியல் வரையப்படுகிறது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 7 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை TNUSRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும். மற்ற வழிகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் எடுத்துக்காது. தேர்வுக்கான அனுமதி அட்டை விரைவில் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

author avatar
Parthipan K