மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000! 

0
125
District level speech and essay competition! The first prize is Rs.10000!
District level speech and essay competition! The first prize is Rs.10000!
மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி! முதல் பரிசே ரூ.10000!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என
பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனிகொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட.8.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இவ்வறிவிப்பிற்கிணங்க, நடப்பு நிதியாண்டில் (2022-23) தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடுவது தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டுமென தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதன்படி,தீநுண்மி (கொரோனா) நோய்த் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் தேனிமாவட்டத்தில் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 07.07.2022 அன்று காலை 09.30 மணி முதல் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சிகள் கூட்டரங்கில் நடைபெறவுள்ளன.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ‘தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும்
தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள்,
பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு. சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு. எல்லைப் போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு’ ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.
கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள்,
அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால்  முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகள் தொடர்பில் கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 04546-251030 / 9159668240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு
மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5.000/-,
என்ற வகையில் காசோலைப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
எனவே, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை,
பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்
.க.வீ.முரளீதரன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.