தமிழகத்தில் பள்ளிகள் மூடல்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து காணப்படும் நிலையில் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டன. பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திடீரென கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்று தடுக்க முகவசம் மற்றும் சமூக இடைவெளியே பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தினர்.
இந்நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நீண்ட நேரம் முகவசம் அணிந்தபடி இருப்பது மிகவும் சிரமத்தை அளிக்கிறது. இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடக்கப்பள்ளி மாணவர் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு சில பெற்றோர் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அவர்களும் தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மேற்கொண்டு கொரோனா தீவிரமாக பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தப்பட்டு உள்ளது. மறுப்புறம் கொரோனா ஊரடங்கு பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தற்போது வாய்ப்பில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து கொரோனா தொற்று தினசரி அதிகரித்துக்கொண்டே சென்றால் கட்டுப்பாடுகளை விதிக்கப்படும், பள்ளிகளை மூட வாய்ப்பிருப்பதாக கூறினார்.