கைவிட்ட தனுஷ்…. காத்திருந்த பிரபல இயக்குனர்…. எடுத்த அதிரடி முடிவு!

0
125

கைவிட்ட தனுஷ்…. காத்திருந்த பிரபல இயக்குனர்…. எடுத்த அதிரடி முடிவு!

இயக்குனர் ராம்குமார் ராட்சசன் 2 திரைப்படத்துக்குப் பிறகு தனுஷை இயக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனார்.

இயக்குனர் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  அதையடுத்து அவர் நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

இது சம்மந்தமாக தனுஷ் இயக்குனர் ராம்குமார் சந்திப்பு சில தடவைகள் நடந்தது. ஆனால் ராம்குமார் நீண்டகாலம் எடுத்துக்கொண்டு செதுக்கிய திரைக்கதை தனுஷுக்கு பிடிக்காமல் பல திருத்தங்களை சொன்னதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்து அந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ராம்குமார் தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தனது சூப்பர்ஹிட் படமான ‘ராட்சசன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்திலும் நாயகனாக விஷ்ணு விஷாலே நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரே இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.