விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார்.
பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக சிறு இடைவெளிகளோடு படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. முதலில் சென்னையில் தொடங்கிய ஷூட்டிங் பின்னர் ஐதராபாத்தில் நடந்தது. பின்னர் ஜுன் மாத இறுதியில் சென்னையில் நடந்தது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. குடும்ப அரசியல் சம்மந்தப்பட்ட கதையாக செண்ட்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையாக வாரிசு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.