“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” அடுக்கு மொழியில் பேசி கலக்கிய TR… லண்டனில் இருந்து வெளியான வீடியோ!

0
258

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” அடுக்கு மொழியில் பேசி கலக்கிய TR… லண்டனில் இருந்து வெளியான வீடியோ!

தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது நடத்தி வருகிறார்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர் கடந்த மாதம் தீடீரென உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

அதையடுத்து நடிகர் சிம்பு, மேல் மருத்துவ சிகிச்சைக்காக தனது தந்தையை நடிகர் சிம்பு நியுயார்க் அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் விரைவில் தமிழகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது தமிழ் நடிகர்கள் நெப்போலியன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் லண்டனில் இருக்கும் நிலையில் டி ராஜேந்தரை சென்று சந்தித்துள்ளார். அப்போது டி ஆர் தன் பாணியில் அடுக்குமொழியில் பேசிய வீடியோவை நெப்போலியன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

http://https://www.instagram.com/reel/CfnmHFUAnEu/?utm_source=ig_web_copy_link

Previous article’யார் மாமன்னன்?’… மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் படத்தின் லேட்டஸ்ட் தகவல்
Next articleதிடீரென பனைமரம் முறிந்து விழுந்ததில் குழந்தை பலி! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here