முதியோர் இல்லங்கள் பதிவு அவசியம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!

0
170
Nursing homes must register! The announcement issued by the High Court!
Nursing homes must register! The announcement issued by the High Court!

முதியோர் இல்லங்கள் பதிவு அவசியம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் முதியோர் இல்லங்கள், தனியார் கட்டண காப்பகங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் ஆனால் சமூக நலத்துறை இடம் முறையாக அனுமதி பெறாமலே ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் தொடங்கப்படுகின்றன. இதை அடுத்து பதிவு செய்யப்பட முதியோர் இல்லங்களில் முதியோர்களை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என சமூக ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் புகார் அளித்தனர் .

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போல் பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும்  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்களை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க கோரிக்கை விடுத்தார் கிருஷ்ணமூர்த்தி. இதை தொடர்ந்து வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி முதியோர் இல்லங்களை ஆய்வு செய்வது, பதிவு செய்ய படாவிட்டால் நடவடிக்கை எடுப்பது, பதிவு செய்வது கட்டாயம் என தமிழக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் அரசாணயை அமல்படுத்தவில்லை அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதேபோல அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அரசாணையை அமல்படுத்தக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும் முதியவர் இல்லங்களில் முறைப்படி கண்காணிப்பது தொடர்பாக அரசு பின்பற்ற வேண்டிய சில விதிகளை நீதிபதிகள் வகுத்துள்ளனர். அனைத்து முதியோர் இல்லங்களையும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணை அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். முதியவர் இல்லங்களில் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டானர்.

குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பின்னரும் நிவர்த்தி செய்யாத முதிய இல்லங்களில் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முதியோர் இல்லங்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் நிர்வாகிகளின் விவரங்களை பராமரிக்க வேண்டும்.மூத்த குடிமக்கள் புகார் அளிக்க ஏதுவாக தனிப்பிரிவை தொடர்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டானர்.

Previous articleஈரோடு மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் அதிரடி முடிவு! போராட்ட தேதி அறிவிப்பு!
Next articleசொந்த கட்சியை சார்ந்தவர்களையே காலை வரிய பிரபல நடிகர்!