குட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

0
178
Good news! Are you stuck without a job? Notification issued by Tamil Nadu Govt
Good news! Are you stuck without a job? Notification issued by Tamil Nadu Govt

குட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீர ராகவ ராவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிபாடுகள் மையம் அலுவலகங்களும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அனுசரிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியாத் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தப்பட உள்ளன.

இம்முகாமில் இருபதற்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணி காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீர ராகவ ராவ் அறிவித்துள்ளார்.

30 வயதிற்கு உட்பட்ட எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகியவற்றை கல்வி தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழிற்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

 

Previous articleசரக்கு ஏற்றி சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு!! பரபரப்பில் சென்னை துறைமுகம்?!.
Next articleஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!..