இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!

0
188

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி இன்று ஆரம்பமாகிறது மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தம்டவுனில் இன்று இரவு 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

நோய் தொற்றிலிருந்து குணமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார். விராட்கோலி பும்ரா, ரவீந்தர் ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயர், உள்ளிட்டோர் 2வது போட்டியில் களமிறங்கவிருக்கிறார்கள். அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அன்னிக்கு திரும்பி இருப்பதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் எழுந்திருக்கிறது.

தீபக்ஹூடா, சூரியகுமார், யாதவ் உள்ளிட்டோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் சொதப்பியதன் காரணமாக தன்னுடைய பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் பந்துவீச்சை பொறுத்த வரையில் புவனேஸ்வர் குமார் சிறந்த நிலையில் இருக்கிறார். இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை காண சிறந்த இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தொடக்கமாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. ஆகவே இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் தலைமையில் களமிறங்குகிறது பென்ஸ்டோக்ஸ்,ஜானிபெர்டோவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இங்கிலாந்து அணி வலுவாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர், லியான் லிவிங்ஸ்டன், உள்ளிட்டோர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள் என்பதில் எந்தவித மாற்று கருத்துமில்லை. இதன் காரணமாக, இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஅலார்ட்! இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் பெய்யவிருக்கும் கனமழை!
Next articleபொதுமக்களே உஷார்! சாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here