பொதுமக்களே உஷார்! சாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி!

0
75

தமிழகத்தில் நோய்த்தொற்றுப்பாதிப்பு குறைந்து காணப்பட்ட சூழ்நிலையில், சமீப காலமாக நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது 8 மாவட்டங்களில் நோய் தொற்று பெற விகிதம் 10% தாண்டி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை. காஞ்சிபுரம், கோவை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஆகவே தலைநகர் சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், தலைநகர் சென்னையில் முககவசம் அணியாதவர்களிடமிருந்து சுமார் 60,000 ரூபாய் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வார காலமாக நோய்த்தொற்று பரவல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆகவே பொதுமக்கள் சந்தை பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் செல்லும்போது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், மாநகராட்சியின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற பகுதிகளில் ஆய்வு செய்ய மாநகராட்சி சார்பாக அந்தந்த வருடக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்த குழுக்களின் ஆய்வின்போது மகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ஜூலை 6ஆம் தேதி அதாவது நேற்று முதல் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939 படி 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், மாநகராட்சியின் குழுக்களின் மூலமாக நேற்றைய தினம் செய்யப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 121 நபர்களிடமிருந்து 60,500 ரூபாய் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.