திடீரென்று மளமள வென பிடித்த தீ! ஓட்டுநர் தப்பி ஓட்டம்!
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த தையொட்டி மக்கள் பலர் இ-ஸ்கூட்டருக்கு மாறினர். அவ்வாறு மாறிவந்த நிலையில் ஆங்காங்கே இ பைக்குகள் எரிய ஆரம்பித்தது. எந்த ஒரு காரணம் இன்றி தீப்பிடித்து எறிய தொடங்கியது. சில மாதங்களுக்கு முன் ஒரு மருத்துவர் தனது இ பைக்கில் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்ததையடுத்து அதனை எரித்து வீடியோவாக பதிவிட்டார். அப்படி இ பைக்குகள் எரிந்ததையடுத்து தற்பொழுது பேருந்து, கார் போன்றவையும் ஆங்காங்கே எரியத் தொடங்கி விட்டது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று பேருந்தின் முன்பக்கம் தீ பிடிக்க ஆரம்பித்தது. தீப்பற்றி எரிய ஆரம்பித்ததும் அதிலிருந்த ஓட்டுநர் கீழே இறங்கி ஓட ஆரம்பித்து விட்டார். அவ்வாறு முன்பக்கம் பிடித்த தீ மளமளவென பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அச்சமயத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஓட்டுனரும் துரிதமாக தப்பித்த நிலையில் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை.எதனால் இந்த தீ பற்றியது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.பேருந்து தீப்பிடித்து எரிந்ததையடுத்து அந்த தேசிய நெடுச்சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.