துரோகி திருமாவளவனை விரட்டி அடியுங்கள்! ஸ்டாலின் முன்னிலையில் சரவெடியாய் வெடித்த திமுக மாவட்ட செயலாளர்
நேற்று முன்தினம்(டிச.8) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பற்றிய திமுகவின் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது,. கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்,.
கூட்டத்தில் பல சுவாரசியமான சம்பவங்களும் அதிரடியான விவாதங்களும் தான் அதிகமாக நடைபெற்றன என்பது தான் உண்மை., இதனை தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் மூடி மறைத்தன என்பது வேறு,
நாடாளுமன்ற தேர்தல் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சர் அரியணையில் அமரப் போகிறார் என்று தமிழகமே ஏன் இந்திய அளவில் முன்னிலையில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் கூட எண்ணி வந்தனர்,. அதனால்தான் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கூட கொடுக்காத முக்கியத்துவத்தை மற்ற மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்து வருகின்றனர்,.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை வீழ்த்தியது,. இது திமுகவை கதிகலங்க செய்துள்ளது,. சூறாவளியாய் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்தும், வீதிவீதியாக தன் கட்சி நிர்வாகிகளை களத்தில் இறக்கிவிட்டு பணத்தை செலவழித்தும் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்தது மு.க.ஸ்டாலினை நிலைகுலையச் செய்தது,. இடைத்தேர்தல் தோல்வி பற்றியும் விவாதிக்கப்பட்டது,.
மேலும், திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்,. பஞ்சமி நில விவகாரத்தில் ஒரு காணொளியில் அண்ணா அறிவாலயமாக இருந்தாலும் போயஸ்கார்டனாக இருந்தாலும் பஞ்சமி நிலம் என்றால் தலித் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்,. அதுமட்டுமில்லாமல் விக்ரவாண்டி இடைத்தேர்தலின் போது எங்களை முன்னிலைப்படுத்தாததால் தான் திமுக தோல்வி அடைய காரணம் என்று திருமாவளவன் பேசியது திமுக உடன் பிறப்புகளை அதிர்ச்சி அடைய செய்தது,. திமுகவின் அடுத்த அரசியல் வாரிசாக உதயநிதி ஸ்டாலினை தயார்படுத்தும் வேலையில் மு.க.ஸ்டாலினும் திமுகவினரும் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்,. இந்நிலையில் திருமாவளவன் செயல்கள் திமுக உடன்பிறப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இது திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எதிரொலித்தது, மு.க.ஸ்டாலினின் வலதுகரமாக செயல்படும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் அவர்கள், நம்முடைய ஓட்டுகளை பெற்று பதவி சுகத்தை அடைந்திருக்கும் ஒருவர் முதலமைச்சரை சந்தித்து பேசுகிறார், கோரிக்கை வைக்கின்றார்,. நம் கூட்டணியில் அவரை சேர்க்காவிட்டால் அவர் எல்லாம் ஜீரோ,. இது போன்ற துரோகிகளுக்கு எல்லாம் நம் தலைவர் உழைக்கக் கூடாது, அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று திருமாவளவனை குறிப்பிடாமல் கூட்டத்தில் சரவெடியாக வெடித்தார்,
பின்பு பேசிய திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, அவர்களை எல்லாம் கழட்டி விட வேண்டாம் அவர்களாகவே கழற்றிக்கொண்டு ஓடும்படி தலைவர் செய்துவிடுவார், நாமே கழற்றி விட்டால் பின்பு தேர்தல் நேரத்தில் நமக்கு தேவைப்பட்டால் அவர்களை அனுக முடியாது என்று பேசினார்,. இந்த பேச்சை எல்லாம் கூர்ந்து கவனித்த திமுக தலைவர் மு. க.ஸ்டாலின், நம் கட்சியினரே ஆளும் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன,. இதே நிலை நீடித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்,.
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது நாடாளுமன்றத் தேர்தலில் கடைசிவரை ஏங்கவிட்டு கூட்டணியில் சேர்த்துக்கொண்ட திருமாவளவனை,. உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணிக்காக அறிவாலயம் வாசலில் கூட மிதிக்காதே என்று திமுக சொல்லலாம் சொல்லிவிட்டதாகவே தெரிகிறது.