பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!
நெல்லை மாவட்டம் பனங்குடி அடுத்த புஷ்பனம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவருடைய மகன் ஜெபஸ்டின் வயது 16. இவன் புஷ்பவனம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் பொழுது கழிக்க பனங்குடி வடக்கு நாற்கரசாலை மேம்பாலம் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றான்.
அங்குள்ள கிணற்றில் அருகில் ஜெபஸ்டின் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது எதிர்பாத விதமாக கிணற்றுக்கோள் தவறி விழுந்தான். அவனுக்கு நிச்சல் தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்தான். நிச்சல் தெரியாத காரணத்தினால் தண்ணீர் மூழ்கி அவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது பெற்றோர் தனது மகனை காணவில்லை என்று தேடினர். உறவினர், நண்பன் என பல இடங்களில் தேடினர். பின்னர் தோட்டத்திற்கு சென்று தேடினர். அங்கு கிணற்றில் மிதந்து கிடந்ததை பார்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், பணகுடி போலீசார் மற்றும் வள்ளியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, ஜெபஸ்டின் உடலை மீட்டனர். அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணகுடி அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.