ஷூட்டிங் ஸ்பாட்டில் தானும் கடுப்பாகி மற்றவர்களையும் கடுப்பாக்கும் ஹன்சிகா… புலம்பும் படக்குழுவினர்!
ஹனிசிகா கையில் இப்போது அதிகமாக படங்கள் இல்லை. எம் ராஜேஷ் இயக்கும் வெப் தொடரில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தேசமுருடு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இரண்டு இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.
இவர் தமிழில் 2011ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எங்கேயும் காதல் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் திரையில் முதலில் வெளியானது அதே வருடம் தனுஷ் ஜோடியாக இவர் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் தான். அதன்பிறகு தமிழில் அவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, வேலாயுதம், தீயா வேலை செய்யனும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2 ,ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பெரிய அளவில் நடிப்புத் திறமை இல்லை என்றாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதையடுத்து அவர் கையில் தற்போது வெகுசில படங்களே உள்ளன. இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் படங்களில் ஷூட்டிங்கில் ஒழுங்காக கவனம் செலுத்தாமல் கேரவனுக்குள் சென்று தோழிகளுடன் அரட்டை அடித்து நேரத்தை வீணாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் உதவி இயக்குனர்கள் உள்ளிட்டவர்களோடு வாக்குவாதம் செய்து சண்டையிட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.