மன உளைச்சலால் ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை!! காரணம் என்ன?
சேலம் நெத்திமேடு மின்வாரி அலுவலகம் எதிரே வசித்து வந்தவர் ரவிக்குமார். இவருடைய வயது 45 இவர் திருமணம் ஆகாதவர். வயிற்று பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வந்தார். அவ்வப்போது கூலி தொழிலுக்கும் சென்று வந்துள்ளார். கொரோனா ஊடரங்கு காலத்திலிருந்து ரவிக்குமார் குடும்ப செலவிற்காக வருமானம் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் அவர் தொடர்ந்து கவலை மற்றும் மன உளைச்சலில் இருந்துள்ளார். தன் வயிற்று பிழைப்பிற்கு கையில் பணம் இல்லாததால் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து முற்றத்தில் தன் தாயின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து இத்தகவலை அறிந்த போலீசார் டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்திவுள்ளது.பின்னர் இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.