இல்லத்தரசிகள் காலை நேரத்தில் செய்யக் கூடியவை! இந்த விஷயங்கள் மட்டும் தான்!
ஒரு வீட்டில் பெண்கள் மகாலட்சுமிகளாக கருதப்படுகின்றனர். அந்தப் பெண்கள் எப்பொழுதும் செய்யக்கூடாத சில விஷயங்கள் இருக்கின்றது. அனைத்து வீட்டிலும் பெண்கள் அதிக பொறுப்புடன் தான் இருக்கின்றார்கள் ஆனால் பெண்கள் இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் காலையில் எழும்போது படுக்கை அறையில்லிருந்து எழுந்து தலைவிரி கோலமாக சென்று வாசல் கதவை திறக்க கூடாது. முதலில் எழும்போது அவரவர்களின் கைரேகையின் கர தரிசனம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். நமது கைரேகையின் வரிசைப்படி தான் தலைவிதி அமைய வேண்டும் என்பது ஐதீகம்.
அதனால் காலை எழுந்தவுடன் கைரேகை தரிசனம் செய்துவிட்டு படுக்கைஅறையை விட்டு எழ வேண்டும். பின்பு பல்துலக்கி முகம் அலம்பி தலை முடியை சரி செய்து விட்டு பிறகு முன் வாசல் கதவை திறக்க வேண்டும். பிறகு முன் வாசல் கதவை திறக்கும் பொழுது தொடப்பம் குப்பைகள் போன்றவற்றை கையில் வைத்துக்கொண்டு கதவை திறக்க கூடாது.
மேலும் கதவை திறக்கும் பொழுது நல்ல வார்த்தைகளை மட்டும் உச்சரிக்க வேண்டும். வாசலை பெருக்கி சிறிய கோலமாவது போட வேண்டும். கோலம் போடாமல் எப்பொழுதும் இருக்கக் கூடாது. தினந்தோறும் வீட்டில் கோலம் போடுவதன் மூலம் நம் வீட்டில் மேல் ஏற்படும் கண் திருஷ்டிகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
மேலும் காலை நேரங்களில் வீட்டில் எந்தவிதமான சண்டைகளையும் ஆரம்பிக்கக் கூடாது. வீட்டில் காலையில் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தால் வீட்டில் பரிபூரணமாக லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இந்த விஷயங்கள் அனைத்தையும் காலையில் எழும்போது செய்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சியும் பல நிம்மதியும் பெருகும் என்பது முன்னோர்கள் வாக்கு.