குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!

Photo of author

By Parthipan K

குப்பைமேடாக இருந்த அதிபர் மாளிகை?சுத்தம் செய்த போராட்டக்காரர்கள்!!

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கற்களையும் செருப்பையும் தூக்கி அவர் வீடுகளில் எறிந்தனர்.இதனால் அங்குள்ள அதிபர் சொகுசு கார்கள் நொறுங்கி போயின. மேலும் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டார்.அதிபரின் வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள சில பொருட்களை எடுத்து சென்றனர். தற்போது வரை போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே உள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தபயா தப்பியோடிய நிலையில் அவரது வீட்டை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள் மாளிகையில் உள்ள நீச்சல் குளங்களில் குதித்து உற்சாகமாக குளித்தனர். மேலும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டும் மதிய உணவு உண்பது உள்ளிட்ட வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வந்தனர். இந்நிலையில் இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் உபயோகித்தது போக மீதமுள்ள பொருட்கள், குப்பைகள், கழிவு பொருட்கள் ஆகியவை மலைபோல் குவித்து வைத்தனர்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஒன்றாக சேர்ந்து திரட்டி மூட்டைகளாக கட்டி வைத்துள்ளனர்.

 

இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கூறும்போது கழிவு பொருட்களை தூய்மை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. ஏனெனில் இது ஒரு நல்ல மனிதர்கள் வாழ்ந்த வரலாறு படைத்த சிறப்பம்சமாக விளங்குகிறது.இதனை சுத்தம் செய்வது எங்களுடைய கடைமை என்று கூறினார்கள்.

இலங்கையில் உள்ள நடைமுறையை எங்களுடைய தலைமுறை மாற்ற வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தி நாங்கள் ஒரு செய்தியை அவருக்கு தெரிவித்து விட்டோம். இதன்பின் நாங்கள் தற்போது அமைதியாக இருக்க வேண்டிய தருணமிது என அவர் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.