நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி?

0
190
Wife died of pesticide poisoning due to land issue?
Wife died of pesticide poisoning due to land issue?

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி?

மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய வயது 50. இவர் சாதாரண கூலி தொழிலாளி. கண்ணனுக்கு இரு திருமணம் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறுகள் தான் இதில் ஒன்று. இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.அமுதவல்லி வயது 35 என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கண்ணனுக்கு சொந்தமான 2000 சதுர அடி நிலத்தை அவரது சித்தி விஜயட்சுமி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். விஜயலட்சுமி வனவாசியை சேர்ந்தவர்.

இதைத் தொடர்ந்து கார்த்திகேயன் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோருக்கு 2015 ஆம் ஆண்டு இந்நிலத்தை விற்று விட்டார். பிரியதர்ஷினி வாங்கிய நிலத்தில் ஆசையாக வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். நேற்று வீட்டு வேலை நடந்திருக்கும் பொழுது அமுதவல்லி வேலையை தடுத்து விட்டு நங்கவள்ளி காவல் நிலையத்திற்குச் சென்று எங்களுக்கு சொந்தமான நிலத்தில் வேறு ஒருவர் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கீதா விசாரணை நடத்தி வந்துள்ளார். பிறகு வீட்டிற்கு சென்ற அமுதவல்லி தன் கணவனிடம் வீட்டு வேலையை தடுத்து நிறுத்த கூறும்படி முற்றுகையிட்டார். இந்நிலத்தை ஏற்கனவே நான் விற்று விட்டதாக கணவன் கூறினார்.இருவருக்கும்  பயங்கரமாக சண்டை ஏற்பட்டது.

கோபத்தில் அமுதவல்லி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். இதனால் அமுதவல்லி  வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து விட்டார். அதிர்ச்சி அடைந்த கணவன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மேட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதவல்லி உயிரிழந்தார்.

பின்பு பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது தந்தையான காளியப்பனிடம்  உடல் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உயிரிழந்த அமுதவல்லியின் மகன் ஆகாஷ் என்பவருக்கு எதிர்காலத்தில் வாழ்வாதாரம் வேண்டுமென அமுதவல்லியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நங்கவள்ளி ஜலகண்டாபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த ஓமலூர் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்தனர். சாலை மறியலில்  ஈடுபட்ட அமுதவல்லியின் மகன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Previous articleகாதலரை கரம் பிடித்தார் பிரபல சின்னத்திரை நடிகை!
Next articleகோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா?