மாணவர்களின் கவனத்திற்கு! யுஜிசியின் புதிய உத்தரவு!
சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாகதான் தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை.
மேலும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உயர்கல்வி செயற்கை என்பது அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு உயர்கல்வி சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மாநில குழு சிற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் படாத நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முடித்து விட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சிபிஎஸ்சி தேர்வு வெளிவந்த பிறகு இந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு தரும் வகையில் மாணவர் சேர்க்கைய்க்கு கால அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. தமிழகத்தில் உள்ள பொறியியல் போன்ற படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை சிபிஎஸ்சி தேர்வு வெளிவந்தவுடன் ஒரு வாரத்திற்கு கால அவகாசம் நீடிக்க வேண்டும் எனவும் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.