இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்!
பீகார் மாநிலம் பாட்னா அருகே சரண் மாவட்டத்தில் மறுக்கா நதிக்கரையோரம் உள்ள கிராமத்தில் இடுகாட்டுக்கு அருகே ஒரு பெண் விறகுகள் பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு அழுகுரல் ஒன்று கேட்டது. அந்த அழுகுரலை கேட்டதும் அந்தப் பெண் பேய் என்று நினைத்து அலறி அடித்து ஓடி சென்றார். அதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் பெண்ணிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அந்த விசாரணைக்கு பதில் சொல்ல முடியாமல் அந்த பெண் கை, கால்கள் நடுங்கிய நிலையில் மிகுந்த பயத்தினால் நின்று கொண்டிருந்தார்.
மேலும் ஊர் பொதுமக்கள் அனைவரும் அந்தப் பெண் பயந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்தப் பெண்ணிடம் பொறுமையாக கேட்க தொடங்கினார்கள். அந்தப் பெண் இடுகாட்டிற்குள் அழுகுரல் கேட்பதாகவும் அதனை கேட்டதும் அவர் ஓடி வந்ததாகவும் கூறினார். அந்தப் பெண் கூறியதை கேட்ட பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனே கிராம மக்கள் அனைவரும் திரண்டு இடுகாட்டிற்கு சென்றனர். அங்கு சென்றவுடன் அவர்களுக்கும் அந்த அழுகுரல் கேட்டது. அழுகுரல் எங்கிருந்து வருகின்றது என்று ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் நின்று கொண்டிருந்தனர்.
மேலும் அந்த அழுகுரல் ஆனது நிற்காமல் ஒலித்து கொண்டேயிருந்தது. பிறகு அந்த மக்கள் அனைவரும் அந்த குரல் வரும் இடத்திற்கு மெதுவாக சென்றனர். அந்த குரலானது மண்ணுக்குள் இருந்து வருவதை கண்ட ஊர் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அழுகுரல் ஆனது ஒரு குழந்தையின் குரல் என்பதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக அந்த மண்ணை அகற்றி பார்த்தபோது அங்கே வாயில் களிமண் வைத்து மூடப்பட்டிருந்த நிலையில் மூன்று வயது குழந்தை உயிரோடு புதைக்கப்பட்டிருந்தது.
மேலும் ஊர் பொது மக்கள் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சரண் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் குழந்தையிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த குழந்தை எனது பெயர் லாலி என்றும் பெற்றோரின் பெயர் ராஜி, ரேகா என்றும் கூறியுள்ளது.
மேலும் அந்த குழந்தைக்கு ஊரின் பெயர் சொல்ல தெரியவில்லை. மேலும் விசாரித்த போது அந்த குழந்தையின் தாயும் மற்றும் பாட்டியும் குழந்தையை இடுகாட்டிற்கு தஅழைத்து வந்து குழி தோண்டி புதைத்ததாகவும் அப்போது அந்த குழந்தை அழுத காரணத்தால் வாயில் களிமண்ணை வைத்து மூடி குழிக்குள் தள்ளி புதைத்ததாகவும் கூறியது. அதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியின் பெற்றோரை தேடி வருகின்றார்கள்.