மன பதட்டத்திற்கு காரணம் இதுதான்! மருத்துவர் கூறும் அறிவுரை!
கொரோனா காரணமாக மன நோயாளிகள் அதிகம் ஆனர்களா என அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. மேலும் ஒருவரின் அழுக்கையை வைத்து மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என கூறுகின்றார்கள் நிபுணர்கள்.
அதனால் தமக்கும் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்று எண்ணி மருத்துவமனையில் சேர்ந்தார். இப்படிப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் ஒரு முறைகூட இதயத்தில் கோளாறு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அறிகுறிகளைப் கண்டு அஞ்சியதால் ஏற்பட்ட மனப் பதற்றம் தான் என மருத்துவர் கூறுகின்றனர்
மேலும் இதற்கான புள்ளி விவரங்கள் கணக்கிட பட்டது அந்த புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 5 முதல் 7 சதவிகிதம் பேருக்கு மனப் பதற்றம் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு தங்களுக்கு இது இருக்கிறது என்பதே தெரியாது என்கிறார்கள் நிபுணர்கள்.
எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் பயம் வரும். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட சூழலில் மட்டும் பயம் வந்து போகும். அதுவே நீடித்திருந்தால் நோயாக மாறுகிறது என மனநோய் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
மனப் பதற்றம் என்பது ஒரு வகையான பயம். எந்த வகையான எதிர்மறையான உணர்வும் உடனடியாக நோயாகிவிடாது. மனதில் சிறிதளவு பயம் இருப்பதால் பிரச்னையில்லை. உண்மையில் அத்தகைய பயம் திறனை மேம்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவற்கும் உதவும். ஒரு சிலருக்கு பயம் அதிகமாகி . எப்போதும் பயத்திலேயே இருப்பார்கள் . வருங்காலத்தைப் பற்றியோ, அல்லது ஏதோ விபரீதம் நடந்துவிடும் என்றோ எப்போதும் அச்ச எண்ணத்திலேயே இருந்தால் அதை நோயாகக் கருத வேண்டும். இதுதான் மனப் பதற்றக் கோளாறு என்கின்றனர் நிபுணர்கள்.
கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு அச்சம், நேர்காணல்களின் போது ஏற்படும் பயம் போன்றவையெல்லாம் அன்றாட வாழ்கையை நடத்துவதிலேயே சிக்கல் ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தால் அது மனப் பதற்றக் கோளாறின் அறிகுறிகளாகவே பட்டியலிடப்படுகின்றன. அதாவது சாதாரண பயம், பீதியாக மாறி இயல்பு வாழ்க்கையை சிதைக்க முற்படும்போது அதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது.
OCD என்று கூறப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயும் இதன் மனப் பதற்றத்தின் ஒரு பிரிவாகவே வரையறுக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய் அதிகரித்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம் எல்லோருக்கும் இருந்தாலும். சிலருக்கு இது அதிகமாகி அடிக்கடி கைகழுவுவது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இது ஓசியிடின் அறிகுறி” என்கிறார் யாமின் கண்ணப்பன்.
மனப் பதற்றத்தின் அறிகுறிகள்:உச்சி முதல் பாதம் வரைக்கும் பல்வேறு வகையான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படுகின்றன. இதயம் படபடப்பாக அடித்துக் கொள்கிறது என்று பெரும்பாலும் கூறுவார்கள். அடிக்கடி வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கை மற்றும் பாதம் ஜில்லெனக் குளிர்ச்சியாகி விடுவது, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவது, அதிகபட்ச உடல் சோர்வு போன்ற உடல் ரீதியான அறிகுறிகள் மனப் பதற்றத்தால் ஏற்படும். ஆனால் இதயப் படபடப்புக்கு இதய நிபுணரையும், வயிற்றுப் பிரச்னைக்கு அதற்கான மருத்துவரையும் பார்க்கிறார்கள்.
மனப் பதற்றம் ஏன் வருகிறது:
மனப் பதற்றம் என்பது உடல் சார்ந்ததாகவும் இருக்கலாம். ஏனென்றால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதால் அவை மனப் பதற்றத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் யாமினி கண்ணப்பன்.
இதற்கான சிகிச்சை :எல்லோருக்குமே மனப் பதற்றம் இருக்கும். முக்கியமான அல்லது புதிய நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது இது ஏற்படும். ஆனால் சிறிது நேரத்துக்குள் சரியாகிவிடும். சிலருக்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றமானது எப்போதும் இயல்பைவிட அதிமாக இருக்கும். அவருக்கு உரிய சிகிச்சை தேவைப்படுகிறது”
பதற்றத்தின்போது உருவாகும் கார்டிசால் என்ற ஹார்மோன் தொடர்ந்து அதிகமாக இருப்பது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நீண்ட காலமாக இதைக் கவனிக்காமல் விட்டால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், வயிற்றுக் கோளாறு என பலவகையான சிக்கல் ஏற்படும். உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பையே குலைத்துவிடும் ஆபத்தும் உண்டு” என்கிறார் யாமினி கண்ணப்பன்.
பதற்றத்தைக் குறைக்க எளிய வழிகள்:
இதை தரையிறங்கும் நுட்பம் என கூரலாம் மற்றும் 5 4 3 2 1 என்றும் கூறலாம். அதாவது இயல்பு நிலைக்குத் திரும்புவது. இதில் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐம்புலன்களையும் பயன்படுத்த வேண்டும். முதலில் உங்களை சுற்றியுள்ள 5 பொருள்களைப் பார்க்க வேண்டும். அது எதிரேயுள்ள தொலைக்காட்சியாகவோ, சட்டப் பையில் உள்ள பேனாவாகவோ இருக்கலாம். அடுத்து அருகேயுள்ள நான்கு பொருள்களை தொட வேண்டும். அது காலுக்கு அடியில் இருக்கும் தரையாகவோ, அருகேயுள்ள மேஜையாகவோ இருக்கலாம். அடுத்து மூன்று ஒலிகளைக் கேட்ட வேண்டும். பின்னர் இரு வாசனைகளை நுகர வேண்டும். ஐந்தாவதாக ஒரு சுவையை உணர வேண்டும். அது நீங்கள் அப்போதுதான் குடித்து முடித்திருந்த தேநீரின் சுவையாகவும் இருக்கலாம். இப்போது நீங்கள் பதற்றம் தணிந்து ஓரளவு இயல்பு நிலைக்கு வந்திருப்பீர்கள் என மருத்துவர் கூறுகின்றனர்.