இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி… 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, டி 20 தொடரை வெற்றி பெற்றது. இப்போது ஒருநாள் போட்டி நடந்துவரும் நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனது.
இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆரம்பமே அமர்க்களமாக முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார் பூம்ரா. அதையடுத்து வந்த ஓவர்களில் அடுத்தடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினார். இதனால் 25 ஓவர்களுக்குள்ளாக 110 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இந்திய அணியின் பூம்ரா 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். பின்னர் விக்கெட் இழப்பின்றி இந்த போட்டியை வென்றது இந்தியா.
இதையடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்கள் சேர்த்தது. இந்த எளிய இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய மளமளவென விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியின் டாப்லி 6 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.