கட்டிப்பிடி வைத்தியம்… ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய்… வைரல் ஆகும் இளைஞர்!

கட்டிப்பிடி வைத்தியம்… ஒரு மணிநேரத்துக்கு 7000 ரூபாய்… வைரல் ஆகும் இளைஞர்!

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ட்ரவர் ஹூர்ட்டன் என்ற இளைஞர் கட்டிப்பிடி வைத்தியம் செய்து செம்மையாக கல்லாகட்டி வருகிறார்.

நவீன உலகத்தில் மனிதர்கள் ஏகப்பட்ட உறவுச்சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் நண்பர்கள் மற்றும் காதலி ஆகியோரோடு அடிக்கடி சண்டை போடும் சூழல்கள் உருவாகின்றன. இந்நிலையில் இதுபோல பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கான பல்வேறு விதமான தெரபிஸ்ட்கள் இப்போது உருவாகி வருகின்றனர்.

அப்படி இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ‘cuddling therapist’ ட்ரவர் ஹூர்ட்டன் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளார். உறவுச்சிக்கல்களில் இருப்பவர்களுக்கு இவர் வசூல்ராஜா கமல் பாணியில் கட்டிப்பிடி வைத்தியம் உள்ளிட்ட தெரபிகளை செய்து தருகிறராம். இதற்காக ஒரு மணிநேரத்துக்கு 75 பவுண்ட்கள் (சுமார் 7100 ரூபாய்) வரை வசூலிக்கிறாராம்.

தனது சேவைப் பற்றி பேசியுள்ள ஹூர்ட்டன் “பலரும் என்னிடம் என்னை செக்ஸ் வொர்க்கர் என்று தவறாக புரிந்துகொண்டு பேசியுள்ளனர். உறவுகளை சரியாக கையாள முடியாமல் பலர் போராடுகிறார்கள். அதைதான் நான் செய்து தருகிறேன். இது அரவணைப்பதை விட அதிகம், அது அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கொடுக்கிறது. அது எதுவாக இருந்தாலும்.” எனக் கூறியுள்ளார்.

Leave a Comment