வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்!

0
69
Due to the carelessness of bank officials! Devotees of seven mountains who complained!
Due to the carelessness of bank officials! Devotees of seven mountains who complained!

வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால்! புகார் அளித்த ஏழுமலையான் பக்தர்கள்!

ஆந்திரா மாநிலத்திலுள்ள  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஆன்லைன் மூலம் அறைகள் பெரு பக்தர்கள் அதற்கான வாடகை கட்டணத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக முன்பணம் செலுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து முன்பு அறையில் தங்கியிருந்த பக்தர்கள் அறையை காலி செய்யும் போது பக்தர்களிடமிருந்து  வசூலிக்கப்பட்ட முன்பணம் உடனடியாக பக்தர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஆன்லைன் மூலம் பக்தர்களிடமிருந்து   பெறப்படும் முன்பணம் தங்கியிருந்த அறைகளை காலி செய்த பின் 30 நாட்கள் ஆகியும் திருப்பி தரவில்லை. அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அனைவரும் தேவஸ்தானத்துக்கு புகார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில் தேவஸ்தான அறைகளை காலி செய்தவுடன் பக்தர்களின் வங்கி கணக்குகளுக்கு தேவஸ்தானம் சார்பில் கூடுதலாக பெறப்பட்ட முன்பணம் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றது.

ஆனால் வங்கிகள் பக்தர்களுக்கு உடனடியாக  பணம் அனுப்பாமல் காலதாமதம் செய்து வருவதால் இந்த புகார்கள் வருகின்றது. மேலும் இந்த பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K