பெரியகுளம் தென்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ்கள் தேக்கம்! கையூட்டு எதிர்பார்க்கின்றாரா விஏஓ?
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட தென்கரை கிராம நிர்வாக அலுவலகம் பிட் 1ல் பொதுமக்கள் பலரும் தமிழக அரசின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ் தேவைகளுக்காக விண்ணப்பித்து பல நாட்களுக்கும் மேலாக சான்றிதழ்கள் வழங்காததால் பொதுமக்கள் மிகுந்த அவதி கொண்டுள்ளனர். சான்றிதழ்கள் கோரி விஏஓ அலுவலகம் சென்றால் ஏதோ ஒரு சில காரணங்களை கூறி அவர்களை அலைக்கழிப்பு செய்வதோடு மட்டுமல்லாமல் அரசு நிர்ணயத்துள்ள காலக்கெடுவினையும் மீறி அதிக கால அவகாசங்கள் எடுத்தும், பொது மக்களிடம் ஏதோ எதிர்பார்த்து சான்றிதழ்கள் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சான்றிதழ்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் பொது மக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிட வேண்டும் என அரசு உத்தரவிட்டும்,அரசு நிர்ணயித்த காலக்கெடு வினையும் மீறி துளியும் விசாரணை மேற்கொள்ளாமல், எதிர்பார்ப்பின் கீழ் சான்றிதழ்களை தேக்க நிலையில் வைத்துள்ள கிராம நிர்வாக அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு விரைந்து சான்றிதழ்கள் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுகின்றனர்.