இலங்கையில் நடக்க இருந்த ஆசியக்கோப்பை தொடரில் மாற்றம்?… பின்னணி என்ன?

0
217

இலங்கையில் நடக்க இருந்த ஆசியக்கோப்பை தொடரில் மாற்றம்? எந்த நாட்டில் தெரியுமா?

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நவம்பர் மாதத்தில் நடக்க உள்ளது. அதிலும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அந்த போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிக்கு முன்னதாகவே இரு அணிகளும் மோத உள்ளன. இலங்கையில் ஆகஸ்ட்டில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும், இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும். இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ள நிலையில் தொடரை இலங்கையில் இருந்து ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இலங்கையின் பொருளாதார சீரழிவு காரணமாக சமீபத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleமுதலமைச்சர்  இன்று வீடு திரும்புவாரா? கட்சித் தொண்டர்கள் ஆர்வம்!
Next articleமருத்துவர்கள் சொன்னாலும் மனம் ஒப்பவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here