ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ?

0
167
Can the status be arrested? Police anarchy?
Can the status be arrested? Police anarchy?

ஸ்டேட்டஸ் வச்சதுக்குலாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?காவல்துறையின் அராஜக செயல் ?

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள  தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும்  மாணவியரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பள்ளிகளுக்கு எதிராக பல முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனால் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது. பள்ளியில் உள்ள வாகனங்கள் அனைத்தையும் போராட்டகாரர்கள்  தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 55 போலீசர்கள் பலத்த காயம்  அடைந்தனர். பின்பு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த போலீசாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டர்கள். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 329 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக ரமேஷ் கண்ணன் என்பவரை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

அவர் வன்முறை தூண்டும் வகையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிந்த உயிர் பிரிந்தது தான் எவரை கைது செய்தாலும் அந்த உயிர் திரும்ப வரப்போவதில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleமருத்துவர்கள் சொன்னாலும் மனம் ஒப்பவில்லை! முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!
Next articleபுதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமல்! இந்த பொருட்களுக்கு அனைத்தும்  வரி விகிதம்  உயர்ந்துள்ளது!